Posts

Showing posts from June, 2024

BNS and IPC new changes

*👉 கீழே குறிப்பிடப்பட்டுள்ள IPC பிரிவுகள் BNS பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன* 1. **302 IPC = 103 BNS**: கொலைக்கான தண்டனை. 2. **304(A) IPC = 106 BNS**: கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்துதல். 3. **304(B) IPC = 80 BNS**: மணமகள் மரணம் (தாலி கொடை தொடர்பான துன்புறுத்தல்). 4. **306 IPC = 108 BNS**: தற்கொலைக்கான தூண்டுதல். 5. **307 IPC = 109 BNS**: கொலைக்கு முயற்சித்தல். 6. **309 IPC = 226 BNS**: தற்கொலைக்கு முயற்சித்தல். 7. **286 IPC = 287 BNS**: வெடிபொருட்களுடன் கவனக்குறைவாக நடத்துதல். 8. **294 IPC = 296 BNS**: ஆபாச செயல்கள் அல்லது பாடல்கள். 9. **509 IPC = 79 BNS**: பெண்ணின் நாணத்தை குலைக்க முயற்சித்தல். 10. **323 IPC = 115 BNS**: திட்டமிட்டு காயம் ஏற்படுத்துதல். 11. **R/W 34 IPC = 3(5) BNS**: பொதுவான நோக்கத்திற்காக குழுவாக நடந்த குற்றங்கள். 12. **R/W 149 = R/W 190 BNS**: சட்டவிரோத கூடுகையின் உறுப்பினர்கள் செய்த குற்றங்கள். 13. **324 IPC = 118(1) BNS**: ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் காயம் ஏற்படுத்துதல். 14. **325 IPC = 118(2) BNS**: மிகுந்த காயம் ஏற்படுத்துதல். 15. **326 IPC = 118(3) BNS**...

False case Police escape legal advice

பதிவு:🔟 பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி? 👊👊👊👊👊👊 🌹 பொதுவாகவே வழக்கில் சிக்கி கொண்டவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது எந்த விதமான மாற்று. நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து யோசித்து, புகாருக்கு புகார்தான் தீர்வு என காவல் நிலையத்தின் உதவியைத்தான் அதிக பட்சமாக நாடுவார்கள். 🌹ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி மாதிரி, ஒருவர் மீது ஒருவரின் புகார் வந்தால் காவலர்களுக்கு கொண்டாட்டம்தான். புகார் அளித்த இரு தரப்பினருக்குமே திண்டாட்டம்தான். ஏனென்றால், ஒவ்வொருவரின் புகாரை ஆதாரமாக வைத்தே மற்ற புகார்தாரரை மிரட்டி இருவரிடம் இருந்தும் ஒட்டு மொத்தமாக லட்சக் கணக்கில் கூட லஞ்சம் வாங்கி விடுவார்கள். எனவே புகாருக்கு புகார் என்பது சரியான வழி அல்ல. 🌹பொய் வழக்கில் சிக்கி கொண்டவர்கள் பெரும்பாலும், வழக்கு அல்லது குற்றச்சாற்று பொய் என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக என்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஆனாலும், அலைய வேண்டியிருக்கிறது என்று கூறி ஆதங்கப்படுவார்கள். ஆதங்கப்படுவதால் எந்த ஆதாயமும் இல்லை. 🌹கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! என்பது முதுமொழி...

Very slow case dismissed

*சென்னை எழும்பூர் 2 வது பெருநகர நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 341,352, 294(b), 323 மற்றும் 506( ii) ஆகிய பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு நடைபெற்று வந்தது.*  அந்த வழக்கு சம்பவம் 23.1.2001 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் வேப்பேரி காவல் நிலையத்தில் 10.2.2001 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 23.4.2001 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு சாட்சி கூட விசாரிக்கப்படவில்லை.  அதனால் வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, நீண்ட காலமாக விசாரிக்காமல் இருக்கும் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டனர்.  எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மேற்படி வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகவும், அதில் அரசு தரப்பில் இன்றுவரை சாட்சியாக யாரும் விசாரிக்கப்படவில்லை என்றும், எதிரிகள் பல ஆண்டுகளாக வழக்கில் ஆஜராகி வருவதாகவும், எதிரிகள் வழக்கை நடத்த தயாராக இருந்தபோதிலும் அரசு தரப்பில் வழக்கை விசாரிக்க எந்த நடவடிக்கைய...