Vasiyam
"வசியம்" வசியம் என்றால் ஒருவரை அல்லது ஒரு பொருளை தன் வசப்படுத்துதல் என்று பொருள். மற்றவர்களையும் விரும்பாதவர்களையும் விரும்பச் செய்தல். வசிய சக்தி நாம் சொன்னதை கேட்கும் படி மற்றவர்களை மாற்றி விடுகிறது. வசியத்திற்கு உரிய மூலிகைகள் . சீதா செங்கழுநீர் - ராஜ வசியம் நில ஊமத்தை - ஸ்ரீ வசியம் வெள்ளை எருக்கலை வேர் - லோக வசியம். விஷ்ணு கிராந்தி--சொறணவசியம் கருத்த பாசம்பை -சர்வ வசியம் வெள்ளை குன்றி வேர்-மிருக வசியம் பொற்றலை கையாந்தகரை- தேவதை வசியம் செந்நாயுருவி-மனித வசியம். உதாரணமாக செந்நாயுருவி மூலம் செய்யப்படும் மை மற்றும் ஜெபங்கள் மூலம் மனிதர்களை வசியம் செய்யலாம் என்பதாகும். செந்நாயுருவி வசிய மூலிகையை நல்ல நேரத்தில் ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரத்தில் குரு ஓரையில் தங்களுக்கு படுபட்சி இல்லாத நாளில் இரும்பு படாமல் பிடுங்க மரக்கம்பை கூர்மையாக சீவி வைத்து அதன் மூலம் தோண்டி பிடுங்கலாம். பிடுங்கு முன் மூலிகைக்கு முன்னால் தேங்காய் பழம் வேற்றிலை பாக்கு வைத்து மஞ்சள் நூல் காப்பு கட்டி சாப விமோசனம் கொடுத்து கற்பூர தீபம் காண்பித்து தொட்டு வணங்கி பிடுங்க வேண்டும். பின் வேரை மட்டும் க...