வாய்மை நேர்மை உண்மை

வாய்மை.
Transparency International.
WikiLeaks.
Julian Assange.
Press Freedom.
Human Rights.
Anti Corruption Bureau.
Vigilance.
Directorate of Vigilance and Anti Corruption (DVAC).
Enforcement Directorate. ED.
CBI. CIA. NIA.
Police. Judiciary. Courts.
மேற்கண்ட அனைத்தும் வாய்மை என்னும் சொல்லின் கீழ் கை கட்டி நிற்கும் கடமை படைத்தவை.
வாய்மை. உண்மை. அப்பட்டமான உண்மை. இது தான் கடவுள். தூய ஒளி.
தூய வெண்மை.
அதற்கு மேல் தூய்மை வெண்மை வாய்மை இல்லை.
அரிச்சந்திரன் வாய்மையால் பட்ட அவமானங்கள்.‌பட்ட கஷ்டங்கள். உலகம் அறியும்.
வாய்மையே வெல்லும்.
சத்யமேவ ஜெயதே.
மேல் அதிகாரிகள் வாய்மை மீதும் உண்மை மீதும் பொதுவாக பற்று ஆர்வம் காண்பிப்பார்கள். ஏன் என்றால் டெசிஷன் டேக்கிங் என்ற முடிவு எடுத்தல் என்பதில்  வாய்மை நேர்மை உண்மை முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்வ ஜனோ சுகினோ பவந்து என்ற "எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்ற தாயுமானவர் பாடிய வரிகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

‍‍‌சமுதாயம் என்பது உண்மையிலும் வாய்மையிலும்
நேர்மையிலும் கட்டப்பட்டுள்ளது.

உண்மையற்ற வாய்மையற்ற நேர்மையற்ற சமுதாயம் அழியும்.

உதாரணமாக 
மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டும் ‌என்பது சட்டம்.
ஆற்று மணல் கொள்ளையர்களால் நாட்டுக்கு எவ்வளவு கேடு என்பதை தரவுகள் சொல்கின்றன.
இன்று ஆற்று மணல் கொள்ளை பற்றி உண்மையோடு வாய்மையோடு பேசும் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள்.
பிளாஸ்டிக் பயன்பாடு குறைத்து வர வேண்டும் என்பது அரசாங்கம் எடுத்த‌ முடிவு. பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய தடை செய்யப்பட்டு உள்ளன. ஆகவே தடை‌ செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் யார் விற்றாலும் வாங்கினாலும் பயன்படுத்தினாலும் வாய்மையுடன் நேர்மையுடன் சுட்டிக்காட்டி சமுதாயத்தை இழிவில் இருந்து காக்க வேண்டும். இல்லை என்றால் கடல் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்து கடல் உயிரினங்கள் வாழும்‌ வகை‌ இன்றி சாக நேரிடும்.
பிளாஸ்டிக் பொருட்கள் பெருக்கத்தால் மனித சமுதாயம் மற்றும் பூமி மாதா இயற்கை அன்னை அழிவை நோக்கிச் செல்கிறாள்.

ஆகவே வாய்மை நேர்மை உடன் வாழும்போது பேசும்போது எழுதும்போது சொல்லும்போது பல எதிர்ப்புகள் வரலாம். பல எதிரிகள் உருவாகலாம். ஆயினும் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும்.

அதுவே சமுதாயம் நல்வழிப்படி வாழ வழி.

வாய்மை உண்மை நேர்மையின் அடையாளமாகத்தான் பாகுபலி கோமதீஸ்வரர் சிலை அம்மணமாக நிற்கிறார்.

மனிதா நீ பிறந்தது அம்மணம்.
செத்த பிறகும் அம்மணம்.
அம்மணமான உண்மை யாருக்கும் வலிக்கக்கூடாது.

எது சரி?
எது தவறு?
என்பதை‌ மேல் அதிகாரிகள் முடிவு செய்ய வாய்மை நேர்மை உண்மை தான் அளவுகோல்.

ஆகவே திருவள்ளுவர் சொன்ன கருத்தை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

யாருக்கும் வலிக்காமல் இங்கு வாழ இயலாது. யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ இயலாது. பூமி மாதாவுக்கு 
சமுதாயத்துக்கு 
சமூகத்துக்கு 
பொது மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து வாழும் அற்ப பதர்களுக்கு வலிக்காமல் வாழ்வது ஈனத்தனம். அவனுக்கு வலிக்கும் என்று தெரிந்து ஏறி அடிப்பது ஏறி மிதிப்பது ‌ஆண்மை. கடமை. பத்திரிக்கையாளன்.
செய்தியாளன்.
சமுதாய அக்கறை கொண்டவன் அதைத்தான் செய்வான்.

உண்மையை உரக்கச் சொல்லும் போது பலருக்கு வலிக்கும். வலிக்கணும்.
ஜெயலலிதா. சசிகலா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றனர். ஏன் என்றால் ‌செய்த தவறு அப்படி.

ஒருவன் திருடன் என்றால் உரக்கச் சொல்லுங்கள் அவன் திருடன் என்று. நீங்கள் அவனை காட்டிக் கொடுப்பதால் அவன் திருந்தலாம். திருத்தப்படலாம்.
சிறு தண்டனை உடன் திருந்தி வாழலாம்.

அவனை காட்டிக் கொடுக்காமல் அவனுக்கு வலிக்குமே. அவனுக்கு தீமையே. அவன் குடும்பத்துக்கு தீமையே என்று இழுத்து இழுத்து மன்னித்துச் சென்றால் அவன் பெரிய திருடன் ஆவான். பெரிய தண்டனை பெறுவான்.

முள் மரம் இளைதில் கொல்க. என்பார்கள். அனைத்து தவறுகளும் சிறிதாக இருக்கும் போதே கண்டிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும். இல்லை என்றால் சமுதாயம் சீர்கேடு அடையும்.

ஒருத்தி விபச்சாரி என்றால் உரக்கச் சொல். அவளிடமே சொல். நீ தேவடியாள் தனம் பண்ணாதே என்று சொல். அதையும் தாண்டி அவள் அதைச் செய்தால் நோய் வரும். சமூகத்தில் பலர் ஒதுக்கி வைப்பார்கள். வாழையடி வாழையாக அவள் குழந்தைகளும் விபசாரம் செய்யும். அது நல்ல தொழில் அல்ல. விபசாரம். விபச்சாரி. தேவடியாள் தனம் என்பது சமூக இழிவுகளில் ஒன்று. 

ஆகவே யாருக்கும் வலிக்காமல் வாழ்வது பேசுவது நடப்பது எழுதுவது என்பது மாயை. தவறு. அநியாயம். அக்கிரமம். 

உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும். மேல் அதிகாரிகள் எதை‌ செய்தித்தாளில் போட வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். சில பல விஷயங்கள் Top Secret, Secret, 
Restricted, Classified என்று பல நோமென்க்ளேச்சர் உடன் ரகசியங்கள் காக்கப்பட்டு அந்த விபச்சாரி அல்லது திருடன் ஓரளவுக்கு மானம் மரியாதை உடன் வாழ மேல் அதிகாரிகள் சில பல நடவடிக்கைகள் செய்வார்கள். அது மனித நேயம். 

ஆகவே உள்ளது உள்ளபடி உரைத்தல் என்றுமே சமுதாய சீரழிவை தடுத்து நிறுத்தும் என்பதில் ஐயமில்லை.

திருவள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்தில் 2 செய்யுள்கள் மட்டுமே முலாம் பூசிய பொய்யும் உண்மை தான் என்றும் பொய் சொல்லி தீமையில்‌ இருந்து காப்பாற்றலாம் என்றும் கூறி உள்ளார். மீதி 8 செய்யுள்கள் அப்பட்டமான தூய்மையான கலப்படம் இல்லாத அம்மணமான உண்மை வாய்மை நேர்மை பற்றி ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறார். வாய்மை நேர்மை உண்மை என்பது ஒரு தவம். சீரிய செயல். கடவுளுக்கு நிகரான செயல். நடத்தை. 

###########
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.   (293) 
ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாதிருப்பானாக; அப்படி பொய்த்த பின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும்
—புலியூர்க் கேசிகன் 

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.   (294) 
உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான் 
—புலியூர்க் கேசிகன்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.   (295) 
மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன் தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான் 
—புலியூர்க் கேசிகன்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.   
(300) 
யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை 
—புலியூர்க் கேசிகன்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.   (299) 
புற இருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது; சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கே அவற்றினும் சிறந்த விளக்காகத் தோன்றும் .
—புலியூர்க் கேசிகன்.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.   (298) 
புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும் .
—புலியூர்க் கேசிகன்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.   (297) 
பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்து வந்தால், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாத போதிலும் கூட, அது நன்மையைத் தரும்.
—புலியூர்க் கேசிகன் 

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.   (296) 
பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை; அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.
—புலியூர்க் கேசிகன்.

Pasupathi Kumarappan.
https://notionpress.com/author/83387

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பிடித்த பாடல் நரியை குதிரை பரியாக்கி திருவாசகம்