Posts

Showing posts from September, 2020

பில்லி சூனியம் ஏவல் செய்வினை காத்து கருப்பு

பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?' என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்.   உண்மையான பாதுகாப்பு கவசம் ..!!! ஸ்ரீ சரபேஸ்வரர் பாதுகாப்பு கவசம் இன்று 27/9/2020  ஞாயிறு அன்று சொல்லுங்கள் இந்த திவ்ய கவசத்தை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம் .பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம்.  சரப புராணம் என்பது சரபம் என்னும் பறவை உருவம் கொண்டு சிவபெருமான் நரசிங்க உருவம் கொண்ட திருமாலை அடக்கிய வடமொழிப் புராணக் கதையைத் தமிழில் கூறும் நூல். 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலைநாதர் என்பவரால் இது இயற்றப்பட்டது. சரப புராணம் 431 பாடல்கள் கொண்டது. பாயிரம், நரசிங்க உற்பத்திச் சருக்கம், கடவுளர் முறையீடு சருக்கம், வீரபத்திரன் எழுச்சி, அறிவுறுத்திய சருக்கம், சலந்தரன் வதைச் சருக்கம், சக்கரம் பெற்ற சருக்கம், நரசிங்கர் வதை சருக்கம் என ஏழு சருக்கங்களைக் கொண்டது. இந்த நூலில் உள்ள பாடல் ஒன்று.