Posts

Showing posts from March, 2024

Police Station Katta Panchayat Civil Case

சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை பெறும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர், அதனை ஒரு மனுவாக கருதி, சமுதாய சேவைப் பதிவேட்டில் அதனை பதிவு செய்து கொண்டு புகார்தாரருக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும். மனுவை பெறும் காவல் அலுவலர், புகார் பெற்ற விபரத்தை உடனடியாக மூத்த அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு காவல்துறையினருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது. சிவில் சம்மந்தப்பட்ட மனுக்களை காவல்துறையினர் விசாரிக்க அதிகாரம் இல்லை என்றாலும், அவர் அதற்கான அதிகாரத்தை குவிமுச சட்டப் பிரிவு 149 ன் மூலம், அதாவது ஒரு காவல் அலுவலர், பிடியாணை வேண்டாக் குற்றத்தை தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் மூலம் அத்தகைய அதிகாரத்தை பெறுகிறார். குவிமுச சட்டப் பிரிவு 149 ஆனது ஒவ்வொரு காவல் அலுவலரும் ஏதாவதொரு பிடியாணை வேண்டாக் குற்றம் புரியப்படுவதை தடுக்கும் நோக்கத்திற்காக அதில் குறுக்கிடலாம் என்று கூறுகிறது. ஆனால் சிவில் மனுக்களை பயன்படுத்தி கட்டப் பஞ்சாயத்து செய்வது சட்ட விரோதமானது. ஏற்கனவே நீதிபதி இரகுபதி

Murder fight between wife husband closed room court case argument

நடு இரவில் பூட்டப்பட்ட வீட்டிற்கு உள்ளே இருந்த கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, அந்த சண்டையில் இருவரும் ஒருவரையொருவர் மாறிமாறி கத்தியால் குத்திக் கொண்டதில், மனைவி உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் ஏற்பட்ட விதம் குறித்து எதிரி தான் இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 106 ன்படி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு எதிரி எந்த விளக்கத்தையும் அளிக்காததால், எதிரி தான் அவருடைய மனைவியை கொலை செய்துள்ளார் என்றும், மருத்துவமனையில் எதிரி கொடுத்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தும், கணவனான எதிரி தான் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது சட்டப்படி தவறாகும்.  ஒரு நபருக்கு இறப்பு ஏற்படுவதற்கான காரணம் குறித்து அளிக்கப்படும் வாக்குமூலம் தான் மரண வாக்குமூலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த மரண வாக்குமூலத்தை அளித்த நபர் பின்னர் உயிர் பிழைத்து விட்டால் அதனை மரண வாக்குமூலமாக கருத முடியாது. அதேசமயம் அவரால் அளிக்கப்பட்ட மரண வாக்குமூலத்தை ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவும் கருத முடியாது  ஏனெனில் ஒப்புதல் வாக்குமூலத்தை கு. வி. மு. ச பிரிவு 164ல் கண்ட