Thiru Aadhi Orai = Thiruvadhirai. Siddhar Orai = Sithirai

தமிழ் மாதங்களின் தொடக்கமும் அதன் பெயர்களுக்கான காரணங்களும்.

தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது உள்ள தமிழ் மாதங்களின் பெயர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட பெயர்கள் அந்த காலத்தில் மூன்று போகம் நெல் சாகுபடி இல்லை இரண்டு போகம் மட்டுமே வருடத்திற்கு நெல் சாகுபடி செய்யப்பட்டது. இன்று பெருமாள் என்று நாம் கடவுளாக வணங்கும் விஷ்ணுசித்தர் தான் இந்த பன்னிரண்டு தமிழ் மாதங்களை உருவாக்கியவர்.

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. அது ஏன் முதல் மாதம் சித்திரை?
இன்று திருவாதிரை என்று அழைக்கப்படும் ஓரையின் பழைய பெயர் சித்திரை .

 வானில் ஒரு பகுதியில்  தோன்றும் நட்சத்திரங்களை புள்ளியாக கொண்டு கற்பனையாக கோடு வரைந்து ஒரு உருவத்தை ஏற்படுத்துவதே ஓரை ( ஓர் + அய் ). இப்படி உருவாக்கப்படும் நற்சித்திரமே நட்சத்திரம்  எனப்பட்டது. முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஓரைதான் திருவாதிரை.

திரு + ஆதி + ஒரை = திருவாதிரை
ரிஷபம் உள்ளடக்கிய ராசிகளை கொண்ட ஓரை. ரிஷபம் என்ற மாடு சிவனின் வாகனம். சிவனே தமிழர்களின் முதல் கடவுள் ,முதல் சித்தன், ஓகக் கலையை கண்டுபிடித்த ஆதியோகி. எனவே முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஓரையை சிவனின் நினைவாக முருகனால் சிவனுக்கு கொடுக்கப்பட்டது. 

சித்தர்+  ஓரை = சித்தரோரை = சித்திரை
இதில் சித்தர் என்பது முதல் சித்தர் சிவனை குறிக்கிறது.

வானில் 6 மணிக்கு திருவாதிரை நட்சத்திரம் தெரியும் நாளில் தமிழர்களின் வருடம்  பிறந்தது. அதன் நினைவாகவே முதல் மாதத்திற்கு சித்திரை என்று பெயர் வைக்கப்பட்டது. 

ஏப்ரல் 14 அன்று சித்திரை ஒன்றாம் நாள் வருகிறது. அப்படித்தான் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது சரி அல்ல காரணம் எந்த நாளில் வானில் திருவாதிரை நட்சத்திரம் காலை 6 மணிக்கு சரியாக உதிக்கிறதோ அந்த நாளை சித்திரை ஒன்றாம் நாளாக கணக்கிட்டனர்.  அடுத்த ஆண்டில் இது 24 நிமிடங்கள் தள்ளிப் போகும். இதே போல் ஒவ்வொரு ஆண்டும் 24 நிமிடங்கள் முந்தைய ஆண்டிலிருந்து திருவாதிரை தோன்றுவது தள்ளிப் போகும். இப்படியே 60 ஆண்டுகளில் ஒரு நாள் தள்ளிப் போகும். அதற்கு காரணம் சூரியனின்  நகர்வு.

வானில் பூமி மற்றும் பிற கோள்களோடு சூரியனும் சுற்றுகிறது அதனால் திருவாதிரை நட்சத்திரம் எல்லா வருடங்களிலும் சரியாக ஏப்ரல் 14 அன்று உதிக்காது. சூரியன் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கும் ஒரு முறை வானில் தனது பாதையில் ஒரு டிகிரி நகரும் அதனால் ஒவ்வொரு  60 ஆண்டுகளுக்கும் ( 60 x 24 நிமிடங்கள்)ஒரு நாள் தள்ளி சித்திரை பிறக்கும். உதாரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் 14இல் சித்திரை பிறந்தால் 60 ஆண்டுகள் கழித்து ஏப்ரல் 15ல் சித்திரை பிறக்கும். அதேபோல் 1800 ( 30 x 60 ) ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் தள்ளி சித்திரை பிறக்கும் அதனை சரி செய்வதற்காக ஒரு மாதம் முன்னதாக வேறொரு ராசியில் சித்திரை ஒன்றாம் நாளை மாற்றுவார்கள். அப்படி மாற்றினால் தான் பருவ காலம் சரியாக கணிக்க இயலும். விவசாயத்திற்கு பருவ காலம் சரியாக வருவது மிகவும் முக்கியம். 

2020 முதல் சித்திரை திருநாள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறிவிட்டது. அதாவது வானில் சூரியன் மேஷ ராசி பகுதியில் இருந்து மீன ராசி பகுதிக்கு வந்துவிட்டது. இன்றைய வருடம் மார்ச் 22 அன்று தமிழ் முதல் மாதம் சித்திரை பிறந்தது.

 தமிழர்கள் ஆட்சி இல்லாத காரணத்தால் இவற்றையெல்லாம் இப்போது சரி செய்ய முடியவில்லை. எனினும் ஐந்தாம் தமிழர் சங்கம் சரியான நாட்காட்டியை விற்பனைக்கு வைத்துள்ளது.

திராவிட கயவர்கள் வேறு தை மாதம் தான் முதல் நாள் என்று குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதன் அடிப்படையில் முதல் மாதம் வந்தது என்ற வரலாற்றுப் பின்புலம் தமிழர்களுக்கு தெரிந்து விட்டால் இவையெல்லாம் தானாக சரி ஆகிவிடும்.

2. வைகாசி
வை என்றால் வெளிச்சம் வெளிச்சம் தரும் கல் வைரம் , வைரவன் என்றால் சூரியனை குறிக்கும் கால வைரவன், காலபைரவன் ஆகியிருக்கிறது. சூரியனே காலத்தை கணக்கிட உதவுகிறது இதை வைத்து முதலில் காலத்தை கணக்கிட்டவர் சிவன் அதனால் சிவனை காலபைரவன் என்றும் காலன் என்றும் அழைக்கிறோம். சூரியனின் வெப்பம் காசும் மாதம் வைகாசி. ( வெயில் அதிகமான மாதம்)

3. ஆனி
செடியில் ஆழத்திற்கு செல்லும் வேர் ஆணிவேர் (ஆழ் நுழை - ஆழ் நு - அழ் நி - ஆனி). விதைத்த விதைகள் அவற்றின் வேர்கள் ஆழத்திற்கு செல்லும் மாதம். சுவற்றை துளையிட்டு உள்ளே செலுத்தும்  இரும்பை ஆணி என்கிறோம்.

4. ஆடி
செடி முளைத்து ஆடும் பருவம் ஆடி

5. ஆவணி
பெண்கள் பருவம் அடைந்தபின் அணியும் ஆடை தாவணி. இந்த தாவணி என்னும் சொல்தான் மெய் மயங்கி ( த் + ஆ = தா) ஆவணி என்றானது. அவிட்டம் நட்சத்திரத்தில் பருவமடைந்த ஆண்களுக்கான சடங்கும் இந்த மாதத்தில் தான் செய்யப்படுகிறது ஆவணி அவிட்டம் என்ற பெயரில்.

6. புரட்டாசி
விளைந்த பயிரை அறுத்து புரட்டி அடிக்கும் மாதம்.  புரட்டி அடி - புரட்டாடி - புரட்டாசி

7. ஐப்பசி
நெல்லை விளைவித்து அதை மருத நிலத்தை சேர்ந்தவர்கள் ஐந்து நிலத்து மக்களுக்கும் பிரித்துக் கொடுத்து ஐந்து நிலங்களின் பசியை தீர்க்கும் மாதம் ஐப்பசி. நெல்லைக் கொடுத்து மற்ற நிலங்களில் கிடைக்கும் பொருட்களைப் பண்டமாற்றி கொள்வார்கள்.

8. கார்த்திகை
முருக கடவுளுக்கான மாதம். முருகர்  விவசாய கடவுள் அதாவது விவசாயத்தை தோற்றுவித்தவர் அதனால்தான் விவசாயம் வேளாண்மை ( வேல் + ஆண்மை ) என்றும் அதை மேற்கொள்பவர் வேளாளர் ( வேளை ஆள்பவர் , வேல் + ஆளர் )என்றும் அழைக்கப்படுகிறார். முருகர் விவசாய நிலங்களை உருவாக்குவதற்கு காட்டை அழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் கார்காலத்தில் காட்டிற்கு தீ வைத்தார் விவசாயத்திற்காக. 
கார் + தீ + கையன் - கார்த்திகேயன்.

9. மார்கழி
மாரி என்றால் மழை ,மழை பொழிந்த பிறகு வரும் மாதம் அதாவது மாரி கழி - மார்கழி.

10. தை
தாய் என்பவள் குழந்தைகளை கரு உருவாக்குபவள். இரண்டாம் பருவத்தில் செடி முளைக்கும் மாதம். தாய் தை ஆனது தையல் என்றாலும் பெண்ணைத்தான்  குறிக்கும்.

11. மாசி
மகவுக்காக சூல் பிடிப்பது மகசூல். மகசூல் - மகசு - மகசி - மாசி.
நெல் சூல் பிடிக்கும் காலம்.

12.பங்குனி
இதுவும் முருகனுக்கான மாதம்தான். மலைகளில் வாழ்ந்த குறவர்கள் காட்டை அழித்து விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அவர்களை போரிட்டு வென்றவர் முருகன். உத்தரை என்றால் உயர்ந்த தரை அதாவது மலையைக் குறிக்கும். குறவர்கள் வலிமையானவர்கள். 
வல் குனி - பல் குனி - பங்குனி . வலிமையானவர்களை குனிய வைத்த  நிகழ்வு
பங்குனி உத்திரம் இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

- நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

Skin Tag Wart Removal by Kerbzera Herbal 10ml Solution from Abulze Kerala