Wednesday, 28 November 2018

சம்பு மகரிசி சாம்பவர் சம்பாரன் மாவட்டம் உத்தர பிரதேசம் நேபாள் சாம்பவர் வடகரை சாம்பான் சம்போ சிவ சம்போ ஷம்பு சாதி ப்ராம்ணர் உபி நேபாள் சம்பா டைனஸ்டி வியத்னாம் கமபோடியா

அகத்தியர் சாம்பவர் அல்ல.
மின்னம்பலம் தவறான செய்தி தருகிறது.
சம்பு மகரிசி அகத்தியர் காலத்தில் சம வேளையில் வாழ்ந்த சாம்பவர் சம்பூகன் சம்போ சிவ சம்போ சம்பாரன் மாவட்டம் உத்தர பிரதேசம் சம்பா டைனஸ்டி வியத்நாம் ஆண்ட சம்புவராயர் வன்னியர் பள்ளி பள்ளேளர் பள்ளேளா பள்ளவர் குல மள்ளர் பள்ளர் குல தலைவர்.
இந்த சம்பு மகரிசிக்கும் அகத்தியருக்கும் இடையே நல்லுறவு இருந்தது. 
சம்பு மகரிசிக்கு கோவில் அகத்தியர் அத்ரி வாழ்ந்து மடிந்த பொதிகை பாபநாசம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ளது.
சாம்பவர் வடகரை என்ற திருநெல்வேலி மாவட்டம் ஊர் பாபநாசம் அருகே உள்ளது.

சாம்பவர்களும் வேளிர்கள் தான் வேள் தான்.
இதனால்தான் தேவேந்திர குல வேளாளர் என்ற பட்டம் கிருஷ்ணசாமி ஐயா புதிய தமிழகம் மக்கள் போட்டுக்கொள்ள நான் அனுமதித்தேன்.

தமிழர் அனைத்து சாதிகளும் வேள் வேளிர் விவசாயி விவசாயம் சார்ந்தே கிராமிய புரட்சி நாகரிகமாகவே இருந்து வந்துள்ளது.

இதில் யாதவரும் இடையரும் கோனாரும் பாலரும் கோபாலுரும் ஆயரும் ஆஹிரும் கௌடரும் கௌட் Gaur Gauda Gaud Gouda Gawd Gounder Koya Kui Koyambedu Coimbatore Koyyapazham Goa Guava Konkan என்று விரிந்த மஹிச அசுரன் மக்களாகிய எருமை மட்டும் வளர்த்த எருமை நாடர்கள் எருமை நாட்டு மக்கள் கன்னடத்தில் இருந்து தமிழகம் வந்த தமிழ் கவுண்டர்களும் அடக்கம்.

குந்த் குந்தா குந்தர் சமணர்கள் அம்மணர்கள் ஜெயினர்கள் குந்தி குந்தாளர் குந்தேளர் சந்தேளர் சண்டாளர் குந்தன் கேபிள்ஸ் செங்குந்தர் முசுகுந்தர் எல்லோரும் எப்படி பெங்கால் ஒரிசா வரை தொடர்போ அது போல கவுண்டர்கள் தொடர்பு உத்தர பிரதேச பஞ்சாபிய ஹரியான கவுர் Kaur Gaur Gaud சாதி வரையும் கன்னட கவுட் கௌட் கௌடா கௌடர் கவுண்டர் சாதி வரையும் செல்லும்.
இந்தியில் கௌர் என்றால் எருமை. இந்த எருமை மாட்டை மட்டும் வளர்த்து அதனால் வரும் பால் தயிர் மோர் தோல் கொம்பு தொழில் வியாபாரம் செய்தவர்கள் கௌடர்கள். இவர்களையே மகிச அசுர மர்த்தினி துர்க்கை காளி மைசூரில் கொன்றாள்.
மகிச அரசன் கௌடா கௌடர்கள் கவுண்டர்கள் நாடு கங்கை வரை பஞ்சாப் வரை பரவி இருந்தது. எனவே இவர்கள் கொங்கு நாட்டு கவுண்டர்கள் கங்கை வேளிர்கள் கங்கை வேள் கங்கை வேளாளர் எனப்பட்டனர். இந்த கங்கை பஞ்சாப் ஹரியானா வேளிர்களே கொங்கணம் கன்னடம் வழியே சேர நாடு கோயம்புத்தூர் கரூர் ஈரோடு வரை வந்தனர். நேபாள் கூட எருமைகளுக்கு புகழ் பெற்றது. நேபாள் பசுபதி நாதர் கோவில் இந்த கொங்கு வேளிர் வேணாடு சேர குல அரசர்கள் கட்டியது தான். கோயா குய் என்ற பழங்குடி ட்ரைபல்களையும் இவர்கள் வேள் வேளிர் ஓரையன் ஓரியன் ஆரிய மயப் படுத்தியதால் கோயா கோயமுத்துர் கோயம்பேடு கோயா கோவா Guava கொய்யா கொய்யாப்பழம் என்ற சொற்களும் கலாசார தொடர்புள்ளவை. கொய்யாப்பழத்தை பெரு என்ற தென் அமெரிக்காவில் இருந்து கொங்கணம் கொண்டு வந்து இந்தியாவிற்கு அறிமுகப் படுத்தியதே கொங்கணம் கோவா ஆண்ட தமிழ் வேளிர் குறிப்பாக கவுண்டர்களின் வன்னியர்களின் முன்னோர்.
குபரன் ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலி மாவட்டம் தலைநகராகக் கொண்டு அளகாபுரி என்று பெயர் கொண்ட இலங்கையை ஆண்ட பொழுது தமிழர் மாயன் மயன் விஸ்வகர்மா சாதி ஆசாரி மக்கள் மன்னராக தனி நாடு கேட்டு கடத்தப்பட்டு தென் அமெரிக்கா வட அமெரிக்கா ஆண்ட போது தமிழர் மாயன் மயன் அரசர்கள் தமிழ் ப்ராம்மண வேள் வேளிர் குபேரன் அரசரிடம் செய்து வந்த எக்ஸ்போர்ட் இம்போர்ட் ஏற்றுமதி இறக்குமதி தொழிலால் வந்த கிடைத்த ல நன்மைகளுள் இந்த பெரு என்ற கொய்யா மரம் கொய்யாப்பழம் ஆகும்.
புஷ்பக விமானமும் தமிழ் ஆச்சாரி ஆசாரி மக்கள் தென் அமெரிக்கா வட அமெரிக்கா சென்று தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து தயாரித்த மெர்க்குரி பாதரசத்தால் இயங்கும் விமானம் ஆகும். பறக்கும் கோட்டைகள் செய்தவன் தமிழன். மாயன் மயன் ஆசாரி தமிழர்கள் ராக்கெட் விமானம் செய்து வேறு கிரகத்துக்கு சென்று விட்டார்கள் என்று சொல்கிறார்கள். 

சீ குவேரா என்ற தென் வட அமெரிக்க பெயர்ச் சொல் தமிழன் தமிழ வேள் தமிழ் ப்ராம்மணர் குபேரன் தொடர்பு உண்டு.

குபேரா குபேரன் என்ற தமிழ்ச் சொல்லே குவேரா சீ குவேரா என்று திரிந்தது.

வாழ்க தமிழர்
வாழ்க தமிழர் விவசாயம்
வாழ்க வேளிர்
வெல்க வேளாண்மை

♥♥♥♥♥♥♥♥♥

மின்னம்பலம் மின்னம்பலம்

புதன், 28 நவ 2018
ஐராவதம் மகாதேவன்: காலம் அரிக்காத கல்வெட்டு!
ஐராவதம் மகாதேவன்: காலம் அரிக்காத கல்வெட்டு!
ரவிக்குமார்
கைமாறு கருதாத உழைப்பாலும் அறிவுத் திறத்தாலும் தமிழ்க் கல்வெட்டியல் ஆய்வுகளில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அறிஞர் ஐராவதம் மகாதேவன்,

தஞ்சை மாவட்டத்தின் வரகூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த 'ராயர் கூட்டம் ' என்ற புகழ்பெற்ற குடும்பத்தினரின் வழி வந்தவர். அவரது முன்னோர்களில் ஒருவரான ஆனை பாகவதர் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் அவையில் வித்வானாக இருந்தவர். அவரது தந்தை மருத்துவப் படிப்பை முடித்து பர்மாவில் பணிபுரிந்தபோது பிறந்தவர்தான் ஐராவதம் மகாதேவன். பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பிய அவரது பெற்றோர் திருச்சிராப்பள்ளியில் குடியேறினர். அங்கு பள்ளியில் பயிலும்போது அவரது உறவினர் ஒருவர் மூலமாக அவர் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டார். தனது 12ஆவது வயதிலேயே சமஸ்கிருதத்தில் கவிதை எழுதும் அளவுக்கு அதில் தேர்ச்சியும் பெற்றார்.

தன்னைப் போலவே தனது மகனையும் மருத்துவராக்க விரும்பினார் மகாதேவனின் தந்தை. ஆனால் போதுமான மதிப்பெண் பெறாததால் பிஎஸ்சி பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார். அதிலும் போதிய மதிப்பெண் பெறாத காரணத்தால் மீண்டும் மருத்துவப் படிப்பு கை நழுவிச் சென்றது. எனவே சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டம் படித்து திருச்சிராப்பள்ளியில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கிய மகாதேவன் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்று 1954ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியில் சேர்ந்தார். 1958ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று புது டெல்லிக்குச் சென்றார். அதுவே அவரது வாழ்க்கையின் திசையைத் தீர்மானிப்பதாக அமைந்துவிட்டது.

கல்வெட்டுத் துறையிலும் கலை வரலாற்று ஆய்விலும் முத்திரை பதித்த மாபெரும் ஆளுமையான சி.சிவராமமூர்த்தியை அங்குதான் அவர் சந்தித்தார். அவரிடம் கல்வெட்டியலின் ஆரம்பப் பாடங்களை அவர் கற்றார். 1961ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் நாட்டுக்குத் திரும்பியபோது சென்னையில் இருந்த மாபெரும் வரலாற்றறிஞரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியை சந்தித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்குத் தலைப்பு ஒன்றைப் பரிந்துரைக்குமாறு வேண்டினார். 'தமிழ்நாட்டில் ஏராளமான குகைகள் உள்ளன. அவற்றில் பிராமி எழுத்துக்களாலான கல்வெட்டுகள் இருக்கின்றன என்றார் நீலகண்ட சாஸ்திரி . அங்கிருந்த கே.வி.சுப்ரமணிய அய்யரோ 'அவையெல்லாம் தமிழ் எழுத்துகள். ஆனால் அவற்றை எவரும் படித்தறிய முடியவில்லை. அதை ஏன் நீங்கள் முயற்சித்துப் பார்க்கக் கூடாது ?' எனக் கேட்டார். அதுதான் தமிழ் பிராமி குறித்த ஆராய்ச்சியில் ஐராவதம் மகாதேவன் ஈடுபடக் காரணமாக அமைந்தது.தமிழ் வரிவடிவத்தின் தோற்றம்

1960களில் ஆரம்பித்த அவரது தமிழ் பிராமி ஆராய்ச்சி பல்வேறு கட்டுரைகளாக வெளிப்பட்டுவந்தாலும் அது 2003ஆம் ஆண்டுதான் முக்கியமான ஒரு நூலாக வெளிவந்தது. கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆராய்ந்து அந்த நூலில் அவர் வெளியிட்டார். (Early Tamil Epigraphy, Harward University press and CreA, 2003) குகைகளில் காணப்படும் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழின் வரிவடிவத்தின் தோற்றம் குறித்த தீர்க்கமான முடிவுகளை அந்த நூலில் அவர் முன்வைத்துள்ளார். கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் கிபி நான்காம் நூற்றாண்டுக்கும் இடையிலான சுமார் அறுநூறு ஆண்டு காலத்தைச் சேர்ந்த எண்பத்தொன்பது கல்வெட்டுகளை ஆய்வு செய்து அந்த நூலில் வெளிப்படுத்தியிருந்தார். அந்தக் கல்வெட்டுகள் யாவும் தமிழ் பிராமி எழுத்துகளால் ஆனவை. அவற்றுள் எண்பத்து நான்கு கல்வெட்டுகள் சமணத்தைச் சேர்ந்தவை மீதமுள்ள ஐந்து கல்வெட்டுகள் எந்த மதத் தொடர்பும் இல்லாத, தனி நபர்கள் குறித்தவை. அவற்றில் ஒன்றுகூட வைதீக மதத்தைச் சேர்ந்ததில்லை. 'கிபி ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இருபத்தோரு கல்வெட்டுகளில் ஒன்றே ஒன்று மட்டும்தான் வைதீக மதத்தைச் சேர்ந்ததெனத் தெரிகிறது' என அவர் குறிப்பிட்டிருந்தார் (பக்கம் 128).பௌத்தர்களும் சமணர்களும் தமிழ்ச் சமூகத்துக்கும், இலக்கியத்துக்கும் ஆற்றியுள்ள சேவையை ஐராவதம் மகாதேவனும் அந்த நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஏறத்தாழ கிபி பதினாறாம் நூற்றாண்டு வரை அந்த சேவை நீடித்ததையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார் . தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களும்; சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பெருந்தொகை போன்ற காப்பியங்களும்; திருக்குறள், நாலடியார் போன்ற அற நூல்களும்; திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி போன்ற அகராதி நூற்களும் சமணர்களால் இயற்றப்பட்டன என்பதைத் தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கும் ஐராவதம் மகாதேவன் தமிழ் மொழிக்கு வரிவடிவம் கொடுத்தவர்கள் சமணர்களே என்று தமது ஆய்வு நிரூபணம் செய்கிறது என்றும் தெரிவித்திருந்தார். பிற்காலத்தில் சங்க இலக்கியம் செழிக்க அவர்கள் ஏற்படுத்தித் தந்த வரிவடிவமே உதவியது. மக்களிடம் கல்வி அறிவு பரவவும் அதுவே காரணமாயிற்று' எனவும் ஐராவதம் மகாதேவன் அந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம் 139).

தமிழ் பிராமி மட்டுமல்லாது அவர் சிந்துவெளிக் குறியீடுகளைப் படித்தறிவதிலும், சிந்துவெளிப் பண்பாடு என்பது திராவிடப் பண்பாடுதான் என்பதை நிறுவியதிலும் மிகப்பெரும் சாதனையைச செய்திருக்கிறார். அந்த ஆர்வம் அவர் 1966ஆம் ஆண்டு டெல்லிக்கு மாற்றலாகிச் சென்றபோது உருவானது. தமிழ் பிராமி குறித்த கள ஆய்வுகள் பணியிட மாறுதலால் தடைபட்ட நிலையில் டெல்லியிலிருந்தபடியே வேறொரு ஆய்வில் ஈடுபட அவர் விரும்பினார்.

அப்போதுதான் தலைமைச் செயலக நூலகத்தில் ஹண்டர் என்பார் எழுதிய சிந்துவெளி எழுத்துகள் பற்றிய நூல் ஓன்று தற்செயலாக அவரது கையில் கிடைத்தது. அந்த நூலின் மூலமாக சிந்துவெளி எழுத்துக்களின் அடிப்படை அம்சங்களைக் கற்றுக்கொண்ட அவர், மத்திய தொல்லியல் துறை அலுவலகத்திலும் நேஷனல் மியூசியத்திலும் வைக்கப்பட்டிருந்த சிந்துவெளி முத்திரைகளை ஆராயும் வாய்ப்பைப் பெற்றார். அந்த நேரத்தில்தான் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இயங்கிவந்த ஜவகர்லால் நேரு நினைவு அறக்கட்டளை ஐராவதம் மகாதேவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஃ பெல்லோஷிப் ஒன்றை வழங்க முன்வந்தது. சிந்துவெளி எழுத்துக்களைக் கணினி மூலமாக ஆராய்ச்சி செய்யுமாறு பொள்ளாச்சி மகாலிங்கம் அறிவுரை கூறியது மட்டுமின்றி அப்போது தொழில்நுட்பக் கல்விக்கான இயக்குனராக இருந்த வா.செ .குழந்தைசாமியிடம் அறிமுகமும் செய்துவைத்தார். அவர் தனது கட்டுப்பாட்டில் கிண்டியில் அமைந்திருந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த கணினி மூலமாக ஐராவதம் தனது ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து உதவிகள் அனைத்தையும் செய்தார். போதிய எழுத்துருக்கள் அக்காலத்தில் இல்லாத காரணத்தால் ஐராவதம் சிந்துவெளி எழுத்துக்கள் பற்றிய தனது ஆராய்ச்சியை நூலாக வெளியிட 1977ஆம் ஆண்டுவரை காத்திருக்க நேர்ந்தது.

சிந்துவெளி நாகரிகமும் பண்டைய தமிழரும்

சிந்துவெளிக் குறியீட்டுகளின் அடிப்படையில் அகத்தியர் குறித்த தொன்மத்தை அவர் மறுவிளக்கம் செய்திருக்கிறார். சிந்துவெளி நாகரிகத்தை தென்னாட்டு திராவிடத்தோடு இணைப்பதற்கு அகத்தியர் தொன்மம் ஒரு முக்கியமான ஆதாரம் என்பது அவரது கருத்து. மு.இராகவையங்கார் தனது வேளிர் வரலாறு என்னும் நூலில் வேளிருக்கும் யாதவருக்கும் பொதுவான முன்னோர்கள் அகத்தியரின் தலைமையில் குஜராத்தின் துவாரகையிலிருந்து தென் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்ததை விவரித்திருக்கிறார். தொல்காப்பியத்துக்கு உரை எழுதும்போது நச்சினார்க்கினியரும் இரண்டு இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் . வேளிர் குலத்தைச் சேர்ந்த 18 வேந்தர்களையும் 18 குடும்பங்களையும் அகத்தியர் அழைத்துவந்து தென் பகுதியில் குடியமர்த்தியதாகவும், அவர் தென் கோடியில் இருக்கும் பொதிகை மலைக்குச் சென்று தங்கியதாகவும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார் என ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டுகிறார். சிந்துவெளி குறீயீடுகளில் அடிக்கடி காணப்படும் கமண்டலம் போன்ற குறியீட்டை கமண்டலத்திலிருந்து பிறந்ததாகச் சொல்லப்படும் முனிவர்களின் தொன்மங்களோடு பொருத்திப் பார்த்து, வசிஷ்டரும் அகத்தியரும் கமண்டலத்திலிருந்து பிறந்தவர்கள் என ரிக் வேதத்தில் கூறப்பட்டிருப்பதையும், அகத்தியர் ' கும்ப சாம்பவர்' என அழைக்கப்படுவதையும் இணைத்து அகத்தியரின் தொன்மத்துக்கு சிந்துவெளிக் குறியீட்டுகளின் அடிப்படையில் புது விளக்கம் தந்திருக்கிறார். காவடி சுமந்து செல்வது போன்று பொறிக்கப்பட்டுள்ள உருவங்களை பொறை, இரும்பொறை; ஆதன் பொறையன்; எவ்வி எனப் படித்திருப்பது அவருக்கிருக்கும் ஆழ்ந்த மொழி அறிவை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

தமிழ் பிராமி ஆராய்ச்சியில் கே.வி.சுப்ரமணிய அய்யரும், தி.நா.சுப்பிரமணியமும் செய்த முன்னோடிப் பணிகளை எப்படி ஐராவதம் மகாதேவன் வளர்த்தெடுத்தாரோ அப்படியே சிந்துவெளி எழுத்துகளைப் படித்தறிவதில் ஹண்டரும் அஸ்கோ பர்போலாவும் செய்த பணிகளை அடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசென்றார். இந்த இரண்டு துறைகளிலும் எவராலும் புறக்கணிக்க முடியாத ஆய்வுகளை ஐராவதம் மகாதேவன் செய்திருக்கிறார். 'சோழர் வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்கிற எவரும் எப்படி நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாதோ அப்படி தமிழ் பிராமி , சிந்துவெளி எழுத்துகள் பற்றிய ஆய்வுகளில் ஐராவதம் மகாதேவன் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்காமல் எவரும் அந்தத் துறைகளில் ஆய்வு மேற்கொள்ள முடியாது' என அறிஞர் ஒய்.சுப்பராயலு கூறியது மறுக்க முடியாத உண்மையாகும்.

பிடிப்பும் உறுதியும்

ஐராவதம் மகாதேவன் தனது ஆய்வில் எப்படி பிடிப்போடு இருந்தாரோ அப்படித் தனது ஆய்வு முடிவுகளில் உறுதியாக இருந்தார். பழந்தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என அழைப்பது பொருத்தமற்றது அதைத் தமிழி என்றோ அல்லது தொன்மை தமிழ் எழுத்து என்றோ அழைக்கலாம் எனக் கல்வெட்டியல் அறிஞர்கள் நடன.காசிநாதன், புலவர் இராசு, முனைவர் இராசவேலு முதலானவர்கள் வலியுறுத்தி வந்தாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. தமிழ் பிராமி என்ற பெயர் லலிதா விஸ்தாரம் என்ற நூலிலிருந்துதான் எடுத்தாளப்பட்டது. அந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் பிராமி என்ற சொல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியலில் தமிழி என்ற சொல்லும் உள்ளது. அதாவது பிராமி என்பது வேறு, தமிழி என்பது வேறு என்பதைத்தான் அது காட்டுகிறது. தமிழ் பிராமி என அழைக்கும்போது அசோகன் பிராமியே இங்கு வந்ததுபோல ஒரு எண்ணம் ஏற்படுகிறது . 'அப்படி அசோகன் பிராமி என்பது இங்கே வந்திருந்தால் அது வந்த பிறகு தமிழி என்பது போய்விட்டதா? அல்லது பிராமியே தமிழி என்று அழைக்கப்படுகிறதா?' என்ற கேள்விகளை கே.வி. ரமேஷ், நாகசாமி போன்ற கல்வெட்டியல் அறிஞர்கள் ஏற்கனவே எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் எந்த விமர்சனத்துக்கும் கவலைப்படாமல் தொடர்ந்து பழந்தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என்றே அவர் குறிப்பிட்டுவந்தார்.

ஐராவதம் மகாதேவனின் பிடிவாதத்துக்கு இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிட வேண்டும். தமிழ் நாட்டில் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் எல்லாமே கிமு 3ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையே என அவர் காலக் கணிப்பு செய்துவந்தார். 2011ஆம் ஆண்டு பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்மணிகளை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அது கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தபோது அந்த அகழ்வாய்வை நடத்திய பேராசிரியர் கா.இராஜன் அவர்களிடம் நான் ஒரு நேர்காணலைப் பதிவு செய்தேன். அப்போது ஐராவதம் அவர்களின் காலக் கணிப்பு குறித்தும் கேட்டேன். "இந்தியாவில் அசோகனுக்கு முந்தைய வரிவடிவங்கள் கிடைத்திருக்கின்றன. பிராகிருத வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. பிராமி வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் அகழ்வாய்வு மேற்கொண்டபோது கிடைத்த வரிவடிவம் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால், மற்றைய தொல்லியல் அறிஞர்கள் அதை ஒரே ஒரு சான்றுதான் கிடைத்திருக்கிறது எனச் சொல்லி ஒதுக்கிவிட்டார்கள். அதன் பிறகு நாகசாமி கொற்கையில் அகழ்வாய்வு செய்து அங்கு கிடைத்த வரிவடிவத்தை கிமு 785 என்று கண்டறிந்தார். அதையும் ஒரே ஒரு சான்றுதான், இன்னும் பல ஆதாரங்கள் வேண்டும் என்று சொல்லி ஒதுக்கிவிட்டார்கள். அதைப்போல சத்தியமூர்த்தி ஆதிச்சநல்லூரிலே அகழ்வாய்வு செய்து கிமு 1300 எனச் சொன்னார். அவரே கேரளாவிலிருக்கும் மாங்காட்டில் ஆய்வுசெய்து அதைக் கிமு ஆறாம் நூற்றாண்டு எனச் சொன்னார். அதையும் ஏற்க மறுக்கிறார்கள். 'நிறைய சான்றுகள் வேண்டும் அப்போதுதான் ஏற்க முடியும்' என்ற வாதம் பொருத்தமற்றது" எனப் பேராசிரியர் கா.இராஜன் குறிப்பிட்டார்.

அத்துடன்,"ஐராவதம் மகாதேவன் அவர்கள் சான்றுகள் அதிகம் கிடைக்காத காலத்தில் தமிழ் பிராமியின் காலம் கிமு மூன்றாம் நூற்றாண்டு எனச் சொல்லிவந்தார். ஆனால், அவரே ஆதாரங்கள் அதிகம் கிடைக்க ஆரம்பித்த பிறகு கிமு இரண்டாம் நூற்றாண்டு என இன்னும் காலத்தைக் குறைத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இது ஒரு மாறுபட்ட கருத்தாகத் தெரிகிறது. அதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும்கூடத் தமிழகம் முழுவதும் ஒரே காலக்கணிப்பு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை" என வருத்தத்தோடு அவர் சொன்னார்.

தமிழ்க் கல்வெட்டியல் ஆய்வை மேலும் செழுமைப்படுத்தும் நோக்கம் கொண்டவையாகவே ஐராவதம் மகாதேவனின் இந்தப் பிடிவாதமான நிலைப்பாடுகளை நாம் கருத வேண்டும். அவர் வலியுறுத்தியதுபோல எண்ணிக்கையில் அதிகமான ஆதாரங்கள் தற்போதைய அகழ்வாய்வுகளில் கிடைத்துவருகின்றன. எனவே இங்கே கிடைக்கும் எழுத்துகள் தமிழி எழுத்துகள்தான் என்பதையும், அவை அசோகன் பிராமியைக் காட்டிலும் காலத்தால் முந்தியவை என்பதையும் இந்திய வரலாற்று அறிஞர்கள் ஏற்கின்ற காலம் தொலைவில் இல்லை. அப்படி ஏற்கப்பட்டு இந்திய வரலாறு தமிழ் நாட்டில் தொடங்கி திருத்தி எழுதப்படுவதற்கான பலமான அடித்தளத்தை அமைத்துவிட்டுப் போயிருக்கிறார் ஐராவதம் மகாதேவன். அந்த மகத்தான அறிஞருக்குத் தமிழ்ச் சமூகம் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

(கட்டுரையாளர்: முனைவர் ரவிக்குமார் அரசியல், கலை, இலக்கிய விமர்சகர். மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். இவரைத் தொடர்புகொள்ள: adheedhan@gmail.com)


புதன், 28 நவ 2018

முந்தையதுஅடுத்தது
மின்னம்பலம்
© 2017 மின்னம்பலம் அமைப்பு.
எங்களைப் பற்றி | Terms of Use
pageLoad 4.1 seconds. first-paint 2.92 seconds. first-contentful-paint 2.92 seconds.

No comments:

Post a Comment

Kushanars Nubians Shanars Nadars blood DNA found in China Japan Korea Nadars and Crackers Business Nadars Sivakasi Japan China Connection

Why Tamils of Tamilnadu could not print clear artistically rich aesthetically pleasing coins gold coins like Kushanars Kusan Lavan Kusan son...