வேளிர்கள் வேள் ஏன் மேல்சாதி அவ்வையார் ஏன் மேல் சாதி

கடவுள் யார் என்பதை ரிக் வேதம் அருமையாக எடுத்துச் சொல்கிறது. இதில் பல சூக்தங்களை சூத்திரங்களை எழுதியவர் தமிழர் அகத்தியர். கடவுள் துகள் என்ற அறிவியலும் ஹிக்ஸ் போசான் என்ற போசளர் சளர் சளன் நளன் நளன் திருநள்ளாறு ஸ்தல புராணம் கண்ட ஒய்சாளர் போசளர் கோசளர் கோசலை என்ற வட நாடு ஆண்ட தமிழ் வேளிர் கண்ட இந்து மதம் தந்த தங்கப் புதல்வன் சத்யேந்திர நாத் போஸ். சுபாஸ் சந்திர போஸ் என்ற மாவீரன் வரலாறு உலகம் அறிந்ததே. தமிழ் சத்ரியர் சுபாஸ் இடம் பிரிட்டிஷார் இந்திய சுதந்திர நாட்டை கொடுக்க பயந்தனர். தமிழ் வேளிர்களான சுபாஷ் மற்றும் வல்லபாய் பட்டேல் இடம் இந்திய தலைமை சென்று இருந்தால் இந்தியா வல்லரசு என்றோ ஆயிருக்கும். அதை செய்யாமல் சிங் சாங் அடிக்கும் திறமையற்ற நேருவிடம் கொடுத்தது அவர் குரோமோசோமில் டிஎன்ஏவில் ஐரோப்பிய பெர்சிய பார்சி ரோமன் கிரேக்க ரத்தம் ஓடுகிறது அவன் நம் சம்ச்சா என்பதால்தான்.

பல சூத்திரங்களை ஈக்வேஷன்ஸ் எழுதிய தமிழர்களை அவேஸ்தன் பெர்சிய பார்சிய பாரசீக பார்த்திய பார்சுவன் ப்ராம்மணர்கள் சூத்ரர்கள் என்று அழைத்தனர். பெருமையான பெயர் தாழ்மையுற்றுவிட்டது.

சூக்தங்கள் புத்த சமண மதத்தில் சுத்தா சூக்தா என மாறியது.
சூத்திரன் என்றால் கணக்கன் ஓரையன் எதையும் கணக்காக அளவாக திறமையாகச் செய்யும் தமிழன் கருப்பன் என்றே பொருள்.

பெங்கால் காசி ஆண்ட தமிழ் வேளிர் சேனர்கள் சேனைத்தலைவர்கள் சென் மற்றும் போசளர் கோசளர் ஒய்சளர் இன தமிழ் ப்ராம்மண கலப்பு இனம் கண்டுபிடித்ததே கடவுள் துகள் என்ற ஹிக்ஸ் போசான்.

போஸ் என்ற சாதிப்பெயர் ஆண்கள் பெரும்பாலும் கருப்பு பார்க்க தமிழர் திராவிடர் போல் இருப்பார்கள்.

பெண்கள் பெரும்பாலும் பெங்காலில் வெள்ளை நிறம் சந்தன நிறம்.

கடவுளை பற்றி அதிகம் தமிழர் அறியவில்லை. அதனால்தான் திருக்குறளில் வீடு பேறு முக்தி பற்றி செய்யுள்கள் குறள்கள் இல்லை.

விநாயகர் அகவலில் அவ்வையார் குண்டலினி ஏழு சக்கரம் துரிய நிலை முக்தி பற்றி எழுதினார்.....ஆகவே பகவத் கீதை காலத்திற்கு பிறகு தான் தமிழர்களுக்கு கடவுள் தன்மை பற்றி தெளிவு பிறந்தது.

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிறே!

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
குவலயம் என்றால் குவளை போல பூமி.
பூமி ஆரஞ்சு போல குவளை வடிவம் என்று ப்ரிட்டிஷ் காரனுக்கு முன்பே தமிழர் சொல்லி விட்டார்கள்.

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே 

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரிஎட்டு நிலையும் தரிசனப் படுத்தி 

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்தை அழுத்திஎன் செவியில் 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரை கழல் சரணே!.

ஆக யோக கலை கடவுள் யார் கடவுள் தன்மை அடைவது முக்தி அடைவது எப்படி என்று சொன்னவர்கள் வேளிர்கள்.

அதனால்தான் வேளிர் மேல் சாதி.

திருக்குறளில் வீடு பேறு முக்தி தெளிவாக இல்லை.

பகவத் கீதையிலும் ரிக் வேதத்திலும் ஈஷா உபநிஷத்திலும் விநாயகர் அகவலிலும் முழு உண்மை உள்ளது.

அதை எழுதியவனும் தமிழன் தான்.

நான்கு வேதங்களையும் பழந் தமிழான கிரந்த வடிவில் எழுதி அச்சிட்டு படித்தால் நிறைய விளங்கும் தமிழர்களுக்கு.

ஏனாதி என்ற பட்டம் தமிழ் வேளாளர் பிள்ளைமார்களுக்கு உண்டு பாண்டிய நாட்டில்.

கட்டுரையாளர் கருத்து=
புகழ்பெற்ற சில சங்க காலப் பாடல்கள் – 1

பக்குடுக்கை நன்கணியார் என்கிற சங்ககாலப்புலவர் தனது புறம்: 194ஆம் பாடலில் இந்த உலகைப் படைத்த இறைவன் சிறிதும் பண்பில்லாதவன் எனக் குற்றம் சாட்டுகிறார். அவரது பாடல் 'ஓர்இல் நெய்தல் கறங்க, ஓர்இல்' எனத்துவங்கி 'இனிய காண்க, இதனியல்புணர்ந் தோரே'. என முடிகிறது. இப்பாடல் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் ஆகிறது எனலாம். "ஒரு வீட்டில் சாவு; இன்னொரு வீட்டில் மணவிழா; சாவு வீட்டில் துக்கம்; மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டது தான் வாழ்க்கை. இதனைப் படைத்தவன் பண்பில்லாதவனே! எனினும் வாழ்க்கையின் இந்த இயல்பை உணர்ந்தவரே அதில் இனிமையைக் காணமுடியும்" என்பதுதான் இதன் பொருளாகும். 

இந்திய அளவில், 'எண்ணியம்' என்கிற சாங்கியக் கோட்பாட்டின் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் புத்தரின் சம காலத்தில் இருந்தவர் இந்த பக்குடுக்கை நன்கணியார் ஆவார். கடவுள் பண்பில்லாதவன் எனக்குற்றம் சாட்டுகிறார் இவர். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் இந்தப் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயமாகும். பொருள்முதல்வாத மெய்யியல் தமிழகத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்கு இவர் போன்றவர்களே காரணமாவர். 

கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் ஏனாதி நெடுங் கண்ணன் என்கிற பாண்டியர் தலைவன் குறுந்தொகையில் பாடியதுதான் 156ஆம் பாடலாகும். அப்பாடல், "பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! இதுதான் காதல் பிரிவால் ஏற்படும் பெரும் மனச்சோர்வு என்பதோ? முள் முருங்கை மரத்தில் கிளைகளைக் களைந்து செய்த சிறு தடியோடு, பிச்சைப் பாத்திரத்தையும், விரத உணவையும் உடைய பார்ப்பன மகனே! எழுத்தில் எழுதப்படாத, வாய்மொழிமூலம் கற்பிக்கப் படக்கூடிய உனது வேதத்தில் பிரிந்துவிட்ட காதலர்களை ஒன்று சேர்க்கும் மருந்து ஏதாவது உண்டா? சொல்!" என்ற பொருளைக்கொண்டது. காதலுக்காக, பார்ப்பனர்கள் புனித நூலாகக் கருதும் வேதத்தைக் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குகிறான் இந்த பாண்டியர் தலைவன். இதுதான் அன்றைய சங்ககால வாழ்வில் பார்ப்பனர்களுக்கும் வேதத்திற்கும் இருந்த நிலை. ஆனால் இந்நிலை கி.மு. வுக்குப்பின் மாறிவிடுகிறது.

கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த படுமரத்து மோசிகீரனார் என்கிற சங்ககாலப் புலவரின் 75ஆம் குறுந்தொகைப்பாடல் "நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?" எனத்துவங்கி "யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?" என முடிகிறது. பாணன் ஒருவன் தலைவன் வந்து கொண்டுள்ளான் எனத் தலைவியிடம் கூறிய போது அதனால் மகிழ்ந்த தலைவி அந்தப் பாணனிடம், "என் காதலர் வரவை நீ பார்த்தாயோ, பார்த்தவர் சொல்லிக் கேட்டனையோ, என் அன்புக்குரிய அவரைப்பற்றிய உண்மையைத் தெளிவாகச் சொல்!, எனது காதலர் வரவு குறித்து யார் யார் சொல்லி நீ அதனைக் கேட்டாய்! வெண்மையான தந்தங்களை உடைய நிறைய யானைகள் உலவும் சோனை ஆற்றின் கரையிலிருக்கும் பொன்போன்ற பாடலிபுத்திர நகரையே உனக்குப் பரிசாகத் தருகிறேன்!" எனக் கூறுகிறாள். 

சோணை ஆறு கங்கை ஆற்றின் கிளை நதியாகும். பெரும்பாலோருக்குப் பாடலி புத்திர நகர் கங்கை நதியின் கரையில் இருப்பதாகவே தெரியும். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே அந்நகர் கங்கையின் கிளைநதியான சோணை ஆற்றின் கரையில் இருப்பதை அறிந்து இந்தத் தமிழ்ப்புலவர் பாடியுள்ளார். தமிழர்கள் பாடலிபுத்திரம்வரை சென்று வணிகம் புரிந்தனர் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாக உள்ளது. இதுபோன்ற 2000க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டதுதான் நமது சங்க இலக்கியமாகும். அதில் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய ஆறு தொகைநூல்களும் பத்துப்பாட்டில் 2-9 வரையான எட்டு பாடல்களும்  தகடூர் யாத்திரை, முத்தொள்ளாயிரம் ஆகியவைகளும்தான் சங்ககாலப் பாடல்களாகும். கலித்தொகை, பரிபாடல், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியன சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தனவாகும். 

பார்வை: 1.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 39-40, 58.
2.பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினி பதிப்பகம், சூலை-2018 பக்: 11-14

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி