தமிழர்கள் கோவில்களுக்கு கோடி கோடியாய் செலவழிப்பதை விடுத்து நல்ல சாலை நல்ல வீடு நல்ல கட்டில் மெத்தை கார் பங்களா டிவி என்று வாழ வேண்டும்.

எனது கேள்வி =
தமிழர்கள் எதிலும் முன்னோடிதான். ஆனால் தமிழர் நாணயங்கள் ரோம நாணயங்களைப் போலோ குப்தர் குஷானர் போலோ கச்சிதமாக இல்லை. ஏனோ தானோ என்று அழகற்று ஒழுங்கற்று இருந்தன. ஆனால் ரோமன்  மற்றும் குஷானர் குப்தர் நாணயங்கள் ஒழுங்காகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. தமிழர்கள் சிலை கோவில் நேர்த்தி நாணயங்களில் இல்லை என்பதே உண்மை.

Pasupathi Kumarappan
Kokilan Sachithananthan மிகத் தவறான பதில். நான் ஒப்பிடுவது சம காலத்திய ரோம நாணயங்கள். கிமு 600 முதல் கிமு 100 வரை தமிழ் பாண்டியர்கள் வணிகம் செய்த போது கூட ரோமர்கள் நாணயம் தமிழர் நாணயத்தை விட அச்சு வார்ப்பு துல்லியம் அழகு வசீகரம் மிக்கவைகளாக உள்ளன. தமிழர்களோ அன்றும் இன்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாலை ரோடு வீடு கல்யாண மகால் என்பவற்றை எளிமையாக உடைசலாக வைத்துக்கொண்டு கோவில்களில் கோடி கோடியாக கொட்டுகிறோம். ரோமர்கள் கிரேக்கர்கள் மேற்கத்தியர்கள் கிறித்துவர்கள் இஸ்லாமியர்கள் அன்றாட வாழ்வில் மிக ஆடம்பரமாக சொகுசாக வாழ்ந்து தெய்வத்தையும் கோவில்களையும் எளிமையாக லைத்துள்ளனர். அதுவே சரி என்பது என் எண்ணம். நல்ல உடை செருப்பு அணிதல் கூட தமிழர்களில் எல்லா சாதிகளுக்கும் வாய்க்கவில்லை.

இனிமேலாவது தமிழர்கள் கோவில்களில் கோடி கோடியாக தங்கம் கொட்டுவதை விட்டு விட்டு நல்ல ஆடம்பர உடை நல்ல உயர் ரக சாப்பாடு கண்கவர் மேக்கப் நல்ல சாலைகள் நல்ல ஆடம்பர வீடுகள் கட்டில்கள் மெத்தைகள் என்று வாழ வேண்டும்.

இந்த ரோமானிய நாணயங்களை ஆராய்ந்தோர் இதற்குச் சமமான நாணயங்கள் வேறெங்கும் கிடைக்கப்பெறாததால் இவை வெறும் காசுகளாக மட்டும் பயன்படாமல் திரவியங்களகவும் பெரும் மதிப்புமிக்க பொருட்களாகவும் பயன்பட்டன எனக் கருதுகின்றனர்.[12] இதனாலேயே பெருமளவு நாணயங்கள் குவியல்களாக புதைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். பிளினி என்ற ஆசிரியர் அரை மில்லியன் செசுட்டெர்செசு (Sesterces) தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது எனக்கூறி, இவ்வாறு தங்கம் ரோமை விட்டு வெளியேறுவது அந்நாட்டின் திரைச்சேரியைப் பாதிக்கும் என கவலை தெரிவித்ததை வைத்து அக்கால ரோம தமிழக வாணிபத் தொடர்புகள் எந்தளவுக்குச் சிறந்திருந்தது என்பதை அறியலாம்.

சீன நாணயங்கள் விளங்குகின்றன சீன தேசத்து இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தோடு நிலவிய வாணிப உறவுகள் பற்றிக் குறிக்கின்றன. கி.மு. 2ஆம் நூற்றாண்டின் சீன நாணயம் தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் பட்டுக்கோட்டை வட்டம் 'ஒலயக் குன்னம்' என்ற ஊரிலும், மன்னார்குடி வட்டத்திலுள்ள 'தாலிக்கோட்டை' என்ற கிராமத்திலும் அதிக சீன நாணயங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சீனத்திற்கும் பண்டைய தமிழகத்திற்கும் இடையே பெரும் வாணிபத் தொடர்பு இருந்து வந்தது தெரியவருகிறது.[13] சீனத்துடன் தமிழகம் மேற்கொண்டிருந்த வாணிபத் தொடர்பு மிகவும் பழைமையானதாகும். இத்தொடர்பு கி.மு. 1000 ஆண்டளவில் தொடங்கியிருக்கலாம் என்பர். தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் அறிவிக்கின்றன.


அவர் கட்டுரை=

நாணய வெளியீடும் தமிழர்களின் தொழில் நுட்ப மேன்மையும்

 கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழர்கள் நாணயங்களை வெளியிட்டு வருகின்றனர். வேப்பம் பழம், நெல்லிக்காய் போன்று இருந்த தொன்மையான கோள வடிவ நாணயங்களை காசுகள் என்கிற பெயரில் முதலில் அவர்கள் வெளியிட்டனர். அதன்பின் தொடர்ந்து பல்வேறு நாணயங்களை அவர்கள வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால் நமது நாணயவியல் அறிஞர்கள் ஒவ்வொரு நாணயத்தையும் வட இந்தியா அல்லது மேற்கத்திய நாடுகளின் நாணயங்களைப் பார்த்துத்தான் தமிழரசுகள் நகலெடுத்தனர் எனக்கூறிவருகின்றனர். கல்லணையின் தொழில் நுட்பம் இன்றைக்கு 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டது. தென்னிந்தியப் பாசனக் கட்டுமானங்களின் தந்தை எனக் கருதப்படும் சர் ஆர்தர் காட்டன் என்பவர் இதன் தொழில் நுட்பத்தை வியந்து பாராட்டுகிறார். 2000 வருடம் கழித்து அதன் தொழிநுட்பத்தை நகலெடுத்துத்தான் இந்தியா முழுவதும், அணை களையும், பாலங்களையும் அவர் கட்டினார். 

      தமிழகத்தில் இருந்து இரும்பு எஃகு தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு சங்ககாலத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்துள்ளது. பிளினி தனது இயற்கை வரலாறு என்கிற நூலில் இரும்புப்பொருட்கள் இரோம நாட்டிற்கு சேர நாட்டிலிருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார். இரும்பு எஃகு தயாரிப்பதற்கு தனி நிபுணத்துவம் தேவைப்பட்டது.  சங்ககாலத் தமிழர்கள் அதனைப் பெற்றிருந்தனர். மிக நீண்ட காலமாக அதாவது 500 வருடத்திற்கு மேலாக தமிழகம் வணிகத்தில் வெற்றி பெற்று வந்ததற்கு சங்ககாலத் தமிழர்களின் தொழில் நுட்பத்தின் மேன்மையே காரணம் ஆகும். இந்நிலையில் அனைத்து நாணயங்களையும் பிற நாட்டினரை நகலெடுத்துத்தான் தமிழரசுகள் தயாரித்தன என்கின்றனர் நமது நாணயவியல் அறிஞர்கள். வடநாட்டிலுள்ள பழங்குடி அரசுகள், வட இந்தியப்பேரரசுகள், மேற்கத்திய அரசுகள்  வெளியிட்ட நாணயங்களை நகலெடுத்துத்தான் தமிழரசுகள் நாணயங்களைத் தயாரித்தனர் என்பதால் அந்நாணயங்களின் காலம் அந்தந்த நாணயங்களின் வெளியீட்டுக்கு 50 முதல் 100 ஆண்டுகள் கழித்துத்தான் நமது நாணயங்களின் காலம் இருக்கும் எனக் கருத்து வெளியிடுகின்றனர். 

 500 வருடங்களுக்கு மேலாக உயர்தொழில்நுட்பமிக்க, ஆடம்பரப் பொருட்களையும் பிற பொருட்களையும் தயாரித்துத் தமது சொந்தக் கப்பல்களில் அனுப்பி, வெளி நாடுகளில் தங்கி ஏற்றுமதியில் மிக அதிக அந்நியச் செலவாணியைத் தமிழர்கள் ஈட்டி வந்துள்ளனர். அவர்கள் அனைத்து நாணயங்களையும் பிற நாடுகளில் இருந்து நகலெடுத்தனர் என்பது அறிவுக்கு ஒவ்வாதது ஆகும். சிலர், ஆரம்பத்தில் தமிழகத்தில் அரசே உருவாகவில்லை என்றனர்; பின் தமிழரசுகள் நாணயங்களை வெளியிட வில்லை என்றனர்; தமிழ் எழுத்து அசோகன் பிராமியில் இருந்து வந்தது என்றனர்; தமிழர்கள் வடவேங்கடம் தாண்டிப் படையெடுக்கவில்லை என்றனர்; அசோகன் கல்வெட்டில் உள்ள சேர, சோழ, பாண்டிய அரசுகள் என்பது இனக்குழுக்கள் என்றனர். இவை எல்லாம் இன்று பொய்யாகிப் போய்விட்டது. அதைப் போன்றது தான் தமிழரசுகள் தாங்கள் வெளியிட்ட அனைத்து நாணயங்களையும் பிற நாடுகளைப் பார்த்து நகலெடுத்தனர் என்பதும் பொய்யானதே ஆகும்.

தமிழரசுகள் ஆரம்பத்தில் கிரேக்க நாணயங்களைப் பார்த்து தலைவடிவ நாணயங்களை வெளியிட்டிருக்கலாம். அதற்காக ஒவ்வொரு தலைவடிவ நாணயமும் கிரேக்க நாணயங்களை நகலெடுத்தவை எனக் கூற முடியாது. தமிழர்கள் ஆரம்பத்தில் கிரேக்கர்களோடுதான் தொடர்பு கொண்டவர்களாக இருந்தனர். உரோமர்களோடுகொண்ட தொடர்பு மிகவும் பிற்காலத்தது. 'அகத்தசு' தான் உரோமின் முதல் வேந்தன்(கி.மு. 31). அவனுக்குப் பல தலைமுறைகளுக்கு முன்பிருந்து நமது தமிழகத்தில் வேந்தர்கள்  நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளனர். ஆகவே உரோம நாணயங்களைப் பார்த்துத்தான் சங்ககாலத் தமிழர்கள் நகலெடுத்தனர் என்பது தவறாகும்.
உக்கிரப்பெருவழுதி, வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகிய பாண்டியர்கள் மாக்கோதையின் காலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தப் பெருவழுதிகளின் நாணயங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம் என்பதால் அதே காலகட்டத்தை சேர்ந்தவைதான் மாக்கோதையின்  நாணயங்களும் ஆகும். மாக்கோதை ஒரு கவிஞனும் கூட. அவன் தனது மனைவி இறந்தபின் தான் வாழ்வது எவ்வளவு துக்கக்கரமானது என வருத்தப்பட்டவன். அவனைச் சுய சிந்தனையும், கருணையும் கொண்ட ஒரு வேந்தன் எனலாம். மாக்கோதை, மாக்கோக்கோதை என்கிற பெயரில் வெளியிடப்பட்ட நாணயங்களும் கிடைத்துள்ளன. இவை போக கொல்லிப்பொறை, கொல்லி இரும்பொறை என்கிற பெயரிலும் நாணயங்கள் கிடைத்துள்ளன. கொல்லிப்பொறை, கொல்லி இரும்பொறை முதலிய நாணயங்கள் பொறையர் கால நாணயங்கள். இவைகளின் காலம் நமது இலக்கியக் கணிப்புப்படி கிமு 2ஆம் நூற்றாண்டு ஆகும். 

       கொல்லிப்பொறை நாணயத்தின் காலம் கிமு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு என்கிறார் முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள்(6) கொல்லிப்பொறை நாணயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு என்பது நமது இலக்கியக் காலக்கணிப்போடு பொருந்திப் போகிறது. அது போன்றே நலங்கிள்ளி பெயரில் ஒரு பானை ஓடு கிடைத்துள்ளது. அதன் காலம் கிமு 1ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும். அடுத்ததாக பிட்டன் கொற்றன் குறித்த கல்வெட்டுக் கிடைத்துள்ளது. அதன் காலம் கிமு 2ஆம் 1ஆம் நூற்றாண்டு ஆகும். பெருவழுதி, தலைவடிவப் பெருவழுதி, மாக்கோதை, குட்டுவன் கோதை, கொல்லிப்பொறை ஆகிய நாணயங்களின் காலங்கள் நமது இலக்கியக் கணிப்போடு பொருந்திப் போகிறது என்கிற விடயம் நமது வரலாற்றுக் காலகட்ட கணிப்புகளின் உண்மையை உறுதிப்படுத்துகின்றன.

பார்வை: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன் 2016, பக்: 292 - 295.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி