கான்சர் வருவது ஏன் என்பதற்கு சரியான விளக்கம் இதுவரை இல்லை. ஆனால் வெளிவந்துள்ள ஆய்வுகள் சில வெஜிடபிள் ஆயிலையும், கொலஸ்டிராலையும் கான்சருடன் தொடர்புபடுத்துகின்றன

Subject: கான்சர் வருவது ஏன் என்பதற்கு சரியான விளக்கம் இதுவரை இல்லை. ஆனால் வெளிவந்துள்ள ஆய்வுகள் சில வெஜிடபிள் ஆயிலையும், கொலஸ்டிராலையும் கான்சருடன் தொடர்புபடுத்துகின்றன

Neander Selvan > ‎ஆரோக்கியம் & நல்வாழ்வு
கான்சர் வருவது ஏன் என்பதற்கு சரியான விளக்கம் இதுவரை இல்லை. ஆனால் வெளிவந்துள்ள ஆய்வுகள் சில வெஜிடபிள் ஆயிலையும், கொலஸ்டிராலையும் கான்சருடன் தொடர்புபடுத்துகின்றன.
உதாரணமாக கான்சர் வந்தவர்கள் பலருக்கும் கொலஸ்டிரால் அளவுகள் மிக குறைவாக இருக்கும். ஆக கொலஸ்டிரால் குறைவதால் கான்சர் வருகிறதா அல்லது கான்சர் வந்தவுடன் கொலஸ்டிரால் குறைகிறதா என ஆராய்ந்து முன்னதற்கு வாய்ப்பில்லை, பின்னதற்கே வாய்ப்பு அதிகம் என கூறுகிறார்கள்.
அடுத்ததாக டிரான்ஸ்பேட்டுக்கும் கான்சருக்கும் இடையே உள்ள தொடர்பு 18,000 பேரை வைத்து நடத்தபட்ட ஆய்வு ஒன்றில் நிருபணமானது. இந்த ஆய்வில் கூறும் தகவல் டிரான்ஸ்பேட் நிரம்பிய ஆயில்களை உண்பதால் கான்சர் வரும் வாய்ப்பு 25% அதிகம் என்பதே. டிரான்ஸ்பேட் என்பது இந்த கனோலா, சபோலா, ரிபைன் செய்யபட்ட ஆயில்கள், டால்டா, வனஸ்பதி, சூரியகாந்தி என அனைத்து எண்ணெய்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படும்.
எண்ணெய் உயர்வெப்பத்தை தாங்கவேண்டும், நீன்டநால் கெடாமல் கடை ஷெல்புகளில் இருக்கவேண்டும் என்பதற்காக எண்ணெய்கள் சுத்திகரிக்கபட்டு, ஹைட்ரஜனேற்றம் செய்யபடுகின்றன. அதாவது கெமிக்கல் ரீதியாக கொழுப்பின் தன்மையை மாற்றிவிடுகிரார்கள். ஆனால் மனித உடலுக்கு இந்த செயற்கை கொழுப்பான டிரான்ஸ்பேட்டை எப்படி கையாள்வது என்பது தெரியாது. டிரான்ஸ்பேட் முழுக்க நம் உடலில் கொழுப்பு செல்களில் டெபாசிட் செய்யபடுகிறது. அது நம் செல்களின் தன்மையையே மாற்றிவிடுகிறது. இதனால் நம் எல்.பி (ஏ) மற்றும் டிரைகிளிசரைஅடு அளவுகள் உயர்கின்றன. இது மாரடைப்பு ரிஸ்க்கை அதிகரிக்கிறது. நம் செல்களில் படியும் இந்த டிரான்ஸ்பேட் ஆனது நம் மரபணுக்களை செல்லுலர் அளவில் தூண்டி கான்சர் ஜீன்களை உயிர்ப்பிக்கலாம் என்பது ஒரு கருத்தாக்கம். இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன.
டிரான்ஸ்பேட் மோசம் என்றதும் லேபிளில் டிரான்ஸ்பேட் அளவு பூஜ்யம் என்பது போல மாற்றி இந்த ஆயில்களை விற்கிரார்கள். ஆனால் அது சரியான மோசடியாகும். ஏனெனில் இவர்கள் ஆயில்களை இப்போது புதிதாக வேறு முறையில் சுத்திகரிக்கிரார்கள். இதன் பெயர் Intersterification என்பதாகும்.
இந்த புதிய முறை சுத்திகரிப்பால் ஆயில்களின் தன்மை இதுவரை மனிதன் காணாத அளவு புதியவகை கொழுப்பாக மாறுகிறது. உடலை இது என்ன செய்யும், என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது யாருக்கும் தெரியாது...ஆனால் தெரிந்துகொள்ளதான் பரிசோதனை எலிகளான நாம் இருக்கிறோமே? டிரான்ஸ்பேட் கெடுதல் என கம்பனிகளுக்கு தெரிந்தது எப்போது தெரியுமா? 1929ல்....உண்மை தெரிந்து சுமார் 90 வருடங்களுக்கு பின் 3 தலைமுறைகளை அழித்துவிட்டு இப்போது வெறு வழியே இல்லை என்ற நிலையில்தான் டிரான்ஸ்பேட் கெடுதல் என ஒப்புக்கொண்டு இந்த புதியவகை கொழுப்புகளுக்கு மாறியுள்ளார்கள். இது கெடுதல் என தெரிந்து வேறு ஆபத்தான வகைகொழுப்புக்கு மாற இன்னும் மூன்று தலைமுறை பலியாகவேண்டும்
ஆக நம் முன்னோர் பயன்படுத்திய எண்னெய்களுக்கு மாறுவதை விட நமக்கு வேறு வழியில்லை.

Comments

Popular posts from this blog

நசி மசி

மலையூர் மம்பட்டியான் கதை

பொதிகை மலை அகத்தியர் கூடம் ஆசிரமம் செல்வது எப்படி