#புராமிசரி_நோட்டு_என்றால்_என்ன...?
#புராமிசரி_நோட்டு_என்றால்_என்ன...? புரோ நோட்டு என்பதை புராமிசரி நோட்டு (Promissory Note) என்பர். சென்னசமுத்திரம் ஊராட்சி இதை I Promise to pay you. "I owe you" (or) "I O U" என்பர். "நான் உங்களுக்கு பணம் கொடுக்க உறுதி அளிக்கிறேன்" என்பதே புராமிசரி நோட்டு. ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்து அவசரத்துக்கு கடன் வாங்குவதை ஊக்குவிக்க இந்த முறையை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பின்பற்றுகின்றனர். இது வியாபார கொடுக்கல் வாங்கல்களுக்கு அப்போது உதவியாக இருந்தது. இரண்டு அறிமுகமான வியாபாரிகள் ஒருவருக்கு ஒருவர், "வரும் நபரிடம் பணம் கொடுக்கும்படி" எழுதிக் கொடுக்கும் சீட்டுக்கு "உண்டி" என்று பெயர். ஒரு நம்பிக்கைக்கு உரிய வாடிக்கையாளர், தனது பாங்குக்கு "எனது சீட்டைக் கொண்டு வரும் நபரிடம் பணம் கொடுக்கவும்" என்று எழுதிக் கொடுப்பதை பில் அல்லது பில் ஆப் எக்சேன்ஸ் Bill of Exchange என்பர். இது இரண்டு வியாபாரிகளுக்கு உள்ளும் நடக்கும். "என் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தில் இருந்து, இந்த சீட்டில் குறிப்பிட்டு இருக்கும் தொகையை, இதைக் கொண்டு வரும் நபரிடம் ...